மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சாரைசாரையாக படையெடுத்து வரும் சிவப்பு அட்டைகள்.. உறக்கத்தை இழந்து தவிக்கும் நாமக்கல் மக்கள்.. பகீர் வீடியோ.!
மழைக்காலமாக இருப்பதால் செழிப்புடன் வளர்ந்த அட்டைகள் வீடுகளுக்கு படையெடுக்க தொடங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் சமீப காலமாகவே நல்ல மழை பெய்து வந்தது. இதனால் அப்பகுதிகள் எங்கும் பச்சைபசேலென பச்சை நிற போர்வை போல காட்சியளிக்கிறது.
இதற்கிடையில், தொடர் மழையின் காரணமாக தண்டாகவுண்டம்பாளையம் பகுதிகளில் சாரைசாரையாக சிவப்பு அட்டைகள் அதிகளவில் வழக்கத்திற்கு மாறாக உலா வருகின்றன. இவைகள் வீடுகளிலும் புகுந்து கொள்கின்றன.
இதனால் குழந்தைகளை வீட்டில் வைத்துள்ள பெற்றோர் என பலரும் தூக்கத்தை இழந்து தவித்து வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.