மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மச்சினன் கொலைக்கு பழிக்கு பழியாக நண்பரை தீர்த்து கட்டிய மச்சான்.! 3 பேர் கைது.!
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மச்சினன் கொலைக்கு பழிக்கு பழியாக இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்து இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார். இவரும் கோவங்காடு பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் என்பவரும் 2022 ஆம் ஆண்டு சென்னையில் தங்கி பணியாற்றி வந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் ஒன்றாக மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் அஜித் குமார் தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அஜித்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 25 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையானார். அதன் பின்னர் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தனது சொந்த ஊருக்கு திரும்பி இருக்கிறார்.
இந்நிலையில் இறந்த சரவணகுமாரின் சகோதரி மாறி தங்கத்தை அகரம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் திருமணம் செய்து இருக்கிறார். பாலமுருகனும் அஜித் குமாரும் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர் தம்பியை கொன்றவனிடம் பழகுவதை நிறுத்துமாறு பாலமுருகனின் தம்பி கூறியிருக்கிறார். அப்போதுதான் தனது மைத்துனர் சரவணகுமார் அஜித் குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்திருக்கிறது.
இதனைத் தொடர்ந்து தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பி கொண்டிருந்த அஜித்குமாரை வழிமறித்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் அரிவாளால் சராமாறியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஏரல் காவல்துறையினர் கொலை செய்த பாலமுருகன் மற்றும் அவரது கூட்டாளிகளான தூத்துக்குடியைச் சேர்ந்த மாரிசெல்வம், கோவங்காட்டைச் சேர்ந்த ஐயன்ராஜ் ஆகியோரையும் கைதுசெய்தனர். தனது மைத்துனரை கொலை செய்ததற்கு பழிக்கு பலியாக அஜித்குமாரை கொலை செய்ததாக பாலமுருகன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.