தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இந்த கொரோனா சமயத்திலும் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக அரசின் தீவிர நடவடிக்கை! இளைஞர்களுக்கு காத்திருக்கும் வேலைவாய்ப்பு!
ரூ.2,368 கோடி முதலீட்டில் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி அடிக்கல் நாட்டினார். மேலும், ரூ.3,185 கோடி முதலீட்டில் 11 நிறுவனங்களின் வணிக உற்பத்தியை நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.
சுமார் 6,955 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள 11 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியையும் துவக்கி தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடும் வகையில் தமிழக அரசு தீவிர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த கொரோனா சமயத்திலும் தமிழக அரசு பல தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிவருகிறது. சென்னை, கடலூர், கோவை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமான தொழில் திட்டங்கள் தொடங்கவுள்ளன. இதனால் இந்த கொரோனா சமயத்திலும் தமிழகத்தில் பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.