திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாவ்.. சூப்பர்..! ஆலங்குடியில் புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி.! எந்த மாவட்டத்தில் தெரியுமா.?
தமிழகத்தில் புதிதாக 10 இடங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இன்று உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் புதிய இரு பாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் புதிய அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சுற்றி 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஆனால் அப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் சென்று படித்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், ஆலங்குடியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதகவல் அப்பகுதி மாணவ, மாணவிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.