பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
கல்யாணத்துக்கு இன்னும் 2 நாளே இருக்கு.. மட்டன் பிரியாணி சாப்பிட்ட புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்!
மட்டன் பிரியாணி சாப்பிட்ட புதுமாப்பிள்ளை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் தலத்தெரு காலணிபேட்டை என்ற பகுதியில் வசித்து வந்தவர் சந்திரமோகன். 30 வயது நிறைந்த இவர் கூலித்தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு நாளை மறுநாள் வரும் வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள் இணைந்து சந்திரமோகனுக்கு விருந்து வைத்துள்ளனர். அப்பொழுது அவர்கள் மட்டன் பிரியாணி தயார் செய்து புதுமாப்பிள்ளைக்கு வழங்கியுள்ளனர். இந்த நிலையில் பிரியாணி சாப்பிட்ட அவருக்கு திடீரென கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவர் வாந்தி எடுத்து மயங்கியுள்ளார்.
இதனை கண்டு பதறிப்போன உறவினர்கள் அவசரஅவசரமாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்திரமோகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் கதறி துடித்துள்ளனர். இந்நிலையில் நாளை மறுநாள் திருமணம் நடைபெறவிருந்த நிலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.