திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மகளிர் உரிமைத் தொகை.! ஜுன் இல்லை; ஜுலைதான் வரும்.! வெளிவந்த முக்கிய அறிவிப்பு.!
தமிழக முதல்வரின் முக்கிய அறிவிப்பான மகளிர் உரிமை தொகை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் புதிய பயனாளிகளை சேர்த்தல் ஜூலை மாதம் நடைபெறலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு ஜூன் மாதம் பெண்களிடம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை
மேலும் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் விதிகள் உள்ள நிலையில் புதிய லிஸ்ட் எடுக்க சில காலங்கள் தேவைபடும் பட்சத்தில் புதிய பயனாளிகளுக்கு ஜூன் 15 பணம் வழங்க இயலாது எனவும் பதில் ஜூலை 15ம் தேதியே அவர்களுக்கு பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கூகுள் மேப்பை பார்த்து, 7 பேரின் உயிரோடு விளையாடிய பெண்.! சென்னையில் விபரீதம்.!
புதிய பயனாளிகள்
தமிழகத்தில் கூடுதலாக 2.30 லட்சம் பேர் இந்த திட்டத்தில் இணைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு வாங்கியவர்களுக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 3 சவரன் நகைக்காக பெண் வெட்டிக்கொலை?; கோவையில் அதிர்ச்சி சம்பவம்.!