ஜல்லிக்கட்டில் வீரர்கள் காயமடையாமல் இருக்க புதிய ஐடியா..! மாடுபிடி வீரர்கள் உச்சகட்ட வரவேற்பு.!



new plan for jallikattu

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம். அதில், அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் பிரசித்தி பெற்றவை. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, இந்தவருடம் புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஆரம்பித்தது.

தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசல்களை கொண்ட மாவட்டத்தில் தற்போது திருவிழா காலம் என்பதால் பல இடங்களில் அதிவிமர்சியாக நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான மாடுபிடி வீரர்களும், அதிகப்படியான காளை உரிமையாளர்களும் உள்ளனர்.

தற்போது நடைபெறும் வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டினை நடத்த கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் போது அதன் கொம்புகள் மாடுபிடி வீரர்களை குத்தும் போது காயம் ஏற்படுகிறது. மேலும் சில நேரங்களில் பலத்த காயமானால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இந்த நிலையில் வீரர்கள் காயமடையாமல் இருக்க காளைகளின் கொம்புகள் மீது ரப்பர் குப்பிகள் பொருத்த கண்காணிப்பு அலுவலர் எஸ்.கே.மிட்டல் அறிவுறுத்தி உள்ளார்.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 19-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்ற 2 இடங்களில் சில காளைகளில் ரப்பர் குப்பிகள் பொருத்தி அவிழ்த்து விடப்பட்டுள்ளன. இதற்க்கு மாடுபிடி வீரர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அதேபோல் களை உரிமையாளர்கள் காளைகளின் கொம்புகளை கூர்மையாக்க வேண்டாம் என மாடுபிடி வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.