#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்தியாவிலே இல்லாத புதிய வசதி தமிழகத்தில்!! அமைச்சர் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய ஒப்பந்தம் ஒன்றினை செய்துள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசுகையில், தமிழகத்துக்கு அடுத்த 4 ஆண்டுகளில் 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரப் பேருந்துகள், 12 ஆயிரம் பி.எஸ்-6 பேருந்துகளை வாங்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இந்தியாவில் எங்குமே மின்சார பேருந்துகள் இல்லை, இந்தநிலையில் தமிழகத்தின் பெருநகரங்களில் மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.