மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தீபாவளி சமயங்களில் வெடி வெடிப்பதற்கான நேரத்தில் அதிரடி மாற்றம்!
தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் பட்டாசு விற்பனைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.மேலும் பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 2 மணி நேரத்துக்குமேல், பட்டாசு வெடிக்க அனுமதிக்க முடியாது என்ற கூறியதுடன், தென் மாநிலங்களில் மட்டும் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடித்துக் கொள்ளலாம் என்றும் நேரத்தை நிர்ணயித்தள்ளது.
உச்சநீதிமன்றத்தின் விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதல் வி.ஏ.ஓ. உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.