மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேறு மாநிலங்களில் இருக்கும் தமிழர்கள் தமிழகம் திரும்ப ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்! விவரம் உள்ளே
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவது ஊரடங்கு அமலில் உள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 40 நாட்களோடு சேர்த்து தற்போது மேலும் இரண்டு வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு மே 17 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து வெளி மாநிலங்களில் தவித்து வருபவர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி சில மாநிலங்கள் நேற்று முதல் சிறப்பு ரயில்களை இயக்க துவங்கிவிட்டன.
இந்நிலையில் வெளி மாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் மீண்டும் தமிழ் நாட்டிற்கு திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக https://rttn.nonresidenttamil.org/ என்ற புதிய இணையத்தளம் ஒன்று தமிழக அரசின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த இணையதளத்தில் வேறு மாநிலக்களில் இருந்து தமிழகம் வர விரும்புவோர் பச்சை நிற பொத்தானையும் தமிழகத்தில் இருந்து வெளியேற விரும்புவோர் பிரவுன் நிற பொத்தானையும் அழுத்தி உள்ளே கேட்கப்படும் விவரங்களை தெரிவிக்க வேண்டும். அதில் கேட்கப்படும் விவரங்களை ஆராய்ந்ததில் ரயிலில் மட்டும் அல்லாமல் தங்களது சொந்த வாகனங்களில் வரவும் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.
அதே சமயம், "தமிழ்நாட்டிற்குள் வரும் போது தங்கள் மற்றும் தங்கள் குடும்ப நலனை கருதி பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தாங்கள் உட்படுத்தப்படுவீர்கள்" என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகம் வர விரும்புவோர் பரிசோதனைகளுக்கு நிச்சயம் ஒத்துழைக்க வேண்டி இருக்கும்.