மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருமணம் முடிந்த 3 நாட்களில் மனைவி முன்னே பலியான கணவன்! உயிருக்கு போராடும் மனைவி!
திருச்சி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை உள்பட 2 பேர் பலியானார்கள். திருமணமான 3-வது நாளில் நிகழ்ந்த இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி லால்குடியை சேர்ந்த மோகன் என்பவர் பெயிண்டராக பணிபுரிந்து மோகனும் அப்பகுதியை சேர்ந்த ரமணி என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் புதுமண தம்பதியினர் இருவரும் விருந்துக்காக உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கிருந்து மோகனின் நண்பரின் பைக்கில் மூன்று பேரும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். திருச்சி-லால்குடி இடையே வாழாடி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவர்களுக்கு பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
அங்கு நடந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்த மோகன், மனைவி கண்முன்னே சம்பவஇடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ரமணிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.