மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு ஜாமினே வேண்டாம்.. சிறைக்கு போறேன்.. கொலை, கொள்ளை வழக்கில் கைதி கோரிக்கை.!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான வாலையார் மனோஜ், "தனக்கு ஜாமின் வேண்டாம், தன்னை மீண்டும் சிறைக்கு அனுப்புங்கள்" என்று மனுதாக்கல் செய்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜாமினில் வெளியே இருக்கும் வாலையார் மனோஜ், தனக்கு ஊட்டியில் உணவு மற்றும் இருப்பிடம் கிடைக்கவில்லை என்பதால், சொந்த ஊரான கேரளாவில் ஆஜராக அனுமதி வேண்டும் என நீதிமன்றத்தில் 3 முறை அடுத்தடுத்து மனுதாக்கல் செய்தார்.
ஆனால், அவரின் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில், "புலன் விசாரணை" என்ற பெயரில் அரசு தரப்பு காலம் தாழ்த்தி வருவதாகவும் குற்றசாட்டை மனோஜ் முன்வைத்து இருந்தார். இந்த நிலையில், எனது ஜாமினை இரத்து செய்து, மீண்டும் என்னை சிறைக்கே அனுப்பிவிடுங்கள் என்று மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணை நாளை நடைபெறும்.