திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கட்டுமான பணியின்போது கட்டிடம் சரிந்து பயங்கர விபத்து; 6 பெண்கள் பலி.. ஊட்டியில் அதிர்ச்சி.!
நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகமண்டலம், லவ் டேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வந்துள்ளது.
அப்போது, திடீரென கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த இடம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். ஆயினும் இடிபாடுகளில் 8 பேர் சிக்கி இருக்கின்றனர்.
இவர்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 8 பேரில் 6 பெண்கள் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.