திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigBreaking: ஊட்டி இன்பச்சுற்றுலாவில் பயங்கரம்: பேருந்து 100 அடி பள்ளத்தில் பாய்ந்து 2 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
இன்பசுற்றுலா சென்றவர்களை அதிரவைக்கும் விதமாக ஏற்பட்ட திடீர் விபத்து சோகத்தை தந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு, தென்காசி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் பயணிகள் தனியார் பேருந்து உதவியுடன் சுற்றுலா வந்துள்ளனர்.
இவர்கள் 54 பேர் சுற்றுலா வாகனத்தில் பயணித்த நிலையில், இன்று பேருந்து இரவில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் வந்துகொண்டு இருந்தது.
அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரம் இருந்த 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
54 பேரில் 30 பேர் படுகாயமடைந்து உயிருக்கு அலறித்துடித்துள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.