திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
18 வயதில் திருமணம், 25ல் சிறை வாழ்க்கை.. அடுத்தடுத்து 3 குழந்தைகள்., 2 கள்ளக்காதல்கள்.. உல்லாச ஆசையால் நடந்த கொடூரம்.. பகீர் பின்னணி அம்பலம்.!
தமிழகத்தை அதிரவைத்த கோவில் பூசாரி கொலை விவகாரத்தில், பெண்ணின் கள்ளக்காதல் பழக்கத்தால் கள்ளகாதலர்களுக்குள் வாக்குவாதம் நடந்து கொலை நடந்தது தெரியவந்துள்ளளது. திரைப்பட பாணியில் இரண்டு கள்ளகாதலர்கள் எதிர்பாராத விதமாக ஒரே நேரத்தில் வந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், புதிதாக கிடைத்தவருடன் கைகோர்த்து பெண் அரங்கேற்றிய கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சார்ந்தவர் சுப்பிரமணி. இவரின் மகன் மாரிமுத்து (வயது 44). திருமணம் முடிந்து மனைவி, மகன், மகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கோத்தகிரி கடைவீதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார்.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாலை ஆறு மணியளவில் செல்போன் அழைப்பை ஏற்று வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடிப் பார்த்து, செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சித்தபோது ஸ்விட்ச் ஆப் என வந்ததால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அவரின் உடல் இரத்தக்காயத்துடன் மீட்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு சென்று பார்த்தபோது, மாயமான மாரிமுத்து கொலை செய்யப்பட்டு இருந்தது உறுதியானது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சம்பவ இடத்திலிருந்த ஒரு பெண்ணின் வீடு சந்தேகத்திற்கு இடமான வகையில் பூட்டப்பட்டு இருந்தது.
தீவிர விசாரணையில், அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்கும் - மாரிமுத்துவுக்கும் கள்ளத்தொடர்பு இருப்பது உறுதியானது. அவரை அதிகாரிகள் தேடியபோது, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வாலிபருடன் இருப்பதை கண்டறிந்து உடனடியாக அவரை கைது செய்தனர். கோத்தகிரியில் உள்ள சிவா காட்டேஜ் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகள் தனலட்சுமி (வயது 25). இவருடன் இருந்தவர் உதயகுமார் (வயது 37) என்பது உறுதியானது.
இருவரும் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்ததும் அம்பலமானது. தனலட்சுமிக்கு முன்னதாகவே முரளி என்பவருடன் திருமணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 5 ஆண்டுகளாக குழந்தைகளை தந்தையிடம் விட்டுவிட்டு, கோவில் மேடு பகுதியில் தனியாக தனலட்சுமி வசித்து வந்துள்ளார்.
அப்போது, தர்மராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், திருமணம் செய்து இருவருக்கும் 3 வயதுடைய மகளும் இருக்கின்றனர். இதனிடையே கோவில் பூசாரி மாரிமுத்து, கோத்தகிரி உதயகுமார் ஆகியோருடன் தனலட்சுமி பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருடன் வெவ்வேறு தருணத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக தனலட்சுமி வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே, சம்பவத்தன்று பூசாரி தனலட்சுமி வீட்டில் இருந்த நிலையில், இரவு பத்து மணி அளவில் உதயகுமாரும் அங்கு வந்துள்ளார். தனலட்சுமி மாரிமுத்துடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த உதயகுமார், தகராறு செய்துள்ளார்.
அச்சமயம் வாக்குவாதம் ஏற்பட, தனலட்சுமி மற்றும் உதயகுமார் சேர்ந்து மாரிமுத்துவை கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இவர்களின் வீட்டருகே வேறு வீடுகளும் இல்லாத காரணத்தால், இருவரும் இரவில் உறங்கிவிட்டு, பின் சாவகாசமாக தப்பித்துச் சென்றுள்ளனர். ஆனால், மேட்டுப்பாளையத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவல் துறையினரின் கூற்றுப்படி, 25 வயதில் கொலை செய்து சிறைக்கு சென்ற தனலட்சுமிக்கு 18 வயதில் திருமணம் முடிந்திருக்கலாம். பள்ளிப்படிப்பை முடித்ததும் செய்து வைக்கப்பட்ட திருமணம், பெண்ணின் ஆசை அவரை கம்பி வைத்த சிறைகளுக்குள் கொலைக்குற்றவாளியாக அடைந்துள்ளது. அவரின் 3 குழந்தைகளின் எதிர்காலம், நம்பிக்கை வைத்த 2 நபர்களின் நிலை தான் இங்கு கேள்விக்குறியாக அமைந்துவிட்டது.