பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
புயல் வரும் என்பதெல்லாம் வதந்தி; இன்று மற்றும் நாளை டெல்டா, உள்மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு - தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தை இன்னும் 7 புயல்கள் தாக்க காத்திருக்கின்றன என்பதெல்லாம் வதந்தி. இதை யாரும் நம்ப வேண்டாம். இன்று மற்றும் நாளை டெல்டா, உள்மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உண்டு என தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது: இன்று டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கடலூர், அரியலூர், மாவட்டங்களில் மழை பெய்யும். இன்று மாலை மேற்கு உள் மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, திருப்பூர், திண்டுக்கல், கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தேனி, நீலகிரி, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்று தொடங்கும் இந்த மழையானது தொடர்ந்து நாளையும் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த மழையானது டிசம்பர் ஒன்றாம் தேதி முற்றிலும் குறைந்து விடும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புயல் பற்றி பதிவிட்டுள்ள அவர், இந்த மாத இறுதியில் தமிழகத்தை புயல் தாக்கும் என்று கூறுவதை யாரும் நம்ப வேண்டாம், வீணாக மக்களுக்கு பயத்தை உண்டாக்க வேண்டாம். ஏனெனில் எந்த ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் இதுவரை தென்படவில்லை. தமிழகத்தை 7 புயல்கள் தாக்குகின்றன என்பதை யாரும் நம்ப வேண்டாம். டிசம்பர் மாதத்தில் அவ்வப்போது மழை பெய்வதற்கான சாத்தியக் கூறுகள் மட்டுமே தென்படுகின்றன. டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
எனவே யாரும் மீண்டும் நம்மை புயல் தாக்கி விடும் என்று அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தபடுகிறது.