திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்று காலையிலேயே கட்டம் கட்டும் மழை.. இந்த மாவட்டங்கள் உஷார்.!
தென்னிந்திய பகுதிகளில் உள்ள மேலடுக்குகளில் மேற்கு திசை காற்று மற்றும் கிழக்கு திசை காற்று இரண்டும் சந்திக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதனால் இன்று புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தில் நாளை 24 ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இத்தகைய நிலையில், அடுத்த 3 மணிநேரத்திற்கு காலை 10 மணியளவில் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் வட மாவட்டங்களான, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.