மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
75 வயதில் மனைவியின் நடத்தையில் சந்தேகம்.! கணவன் செய்த கொடூரச்செயல்!
தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், விவேக் நகர், 5வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் 75 வயது நிரம்பிய ஜெகநாதன். இவர், ஜெனரேட்டர் பழுதுபார்க்கும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுலோக்ஷனா (62). கடந்த சில நாட்களாக ஜெகநாதனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு, அதற்காக மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவர், தனது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆத்திரமடைந்த ஜெகநாதன் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து அவரின் மனைவி சுலோச்சனாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து ஜெகநாதன் அவரது வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்த கேபிள் ஒயரை எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அணைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஜெகநாதன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது உள்ளே அவரின் மனைவியும் கழுத்தறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.