மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்.! வெளியே சொன்னால் கொன்றுவிடுவேன் என மிரட்டல்.!
சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்ட போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. இந்தநிலையில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியன். 54 வயது நிரம்பிய இவர் கூலித்தொழில் செய்துவந்துள்ளார். இந்தநிலையில் பள்ளிக்கு சென்று வந்த 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிது.
மேலும், இது பற்றி வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இந்தநிலையில் நடந்த சம்பவத்தை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.