ஓடும் ரயிலின் முன்பு பாய்ந்த முதியவர்: சடர்ன் பிரேக் அடிச்ச எஞ்சின் டிரைவர்!.. வைரலாகும் அதிர்ச்சிகர வீடியோ..!



old man who jumped in front of the moving train was the engine driver who hit the southern brake

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து வந்த சத்திரபதி எக்ஸ்பிரஸ் இன்று காலை 9. 30 மணிக்கு  வந்தடைந்தது. சுமார் 2 நிமிட இடைவெளிக்கு பிறகு திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து  மெதுவாக புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

அப்போது தண்டாவளத்திற்கு இடையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் முதியவர் ஒருவர் ஈடுபட்டு கொண்டிருந்ததை, ரயிலின் பின்புறத்தில் இருந்த எஞ்சின் கார்டு பார்த்துள்ளார். இதனையடுத்து உடனடியாக எஞ்சின் டிரைவரை உஷார்ப்படுத்தியதால் அதிவேக (சடர்ன்) பிரேக் போட்டு ரயில் நிறுத்தப்பட்டது.

இதன் காரணமாக முதியவர்  காயங்களுடன் உயிர் தப்பினார். இதன் பின்னர் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்த ரயில்வே காவல்துறையினர் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த  சண்முகம் என்பவர் குடும்ப தகராறு  காரணமாக ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொள்ள முயன்றதாக தெரியவந்துள்ளது. ஒடும் ரயிலில் பாய்ந்து தற்கொலை முயற்சி செய்த சம்பவத்தால் ரயில்  சேவை அரை மணி நேரம் பாதிக்கப்பட்டது.