ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
மீண்டுமொரு கொடூரம்! 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 65 வயது முதியவர்! வெளியான அதிர்ச்சி தகவல்!
கோயம்பத்தூரை சேர்ந்த தம்பதிக்கு 7 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் இருந்துள்ளனர். இந்த தம்பதிகள் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இவர்கள் பகலில் வியாபாரத்துக்கு செல்லும்போது குழந்தைகளை தனது உறவினரான வரதராஜன் (வயது 65) என்பவர் வீட்டில் விட்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் வரதராஜன், 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி அங்கு செல்ல மறுத்ததுடன், தாத்தா தன்னிடம் தவறாக நடந்து கொள்கிறார் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அவர்கள் அளித்த புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுமியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அதில் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து வரதராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.