'துணியில்லாம நடுரோட்ல நின்னேன்.' சித்தப்பு சரவணனின் மோசமான அனுபவம்.. கண்ணீர் விட்ட நடிகர்.!
பிணமாக மிதந்த பிஞ்சு.. கதறி துடிக்கும் தாய்.. பெற்றோர்களே கவனம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!
அழகான குருவிக்கூடு
தஞ்சை மாவட்டத்தில் சேதுபாவாசத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகில் வினோத் மற்றும் மோனிஷா என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு தரணிஷ் (1.5 வயது) மற்றும் ஹரிணி (3 வயது) என்ற இரு குழந்தைகள் இருந்துள்ளனர். குடும்பம், குழந்தைகள் என்று அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர். அந்த மகிழ்ச்சியை குலைக்கும் விதமாக தான் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.
வாய்க்காலில் விழுந்த குழந்தை
சம்பவ தினத்தில் வீட்டிலிருந்த சமையல் வேலைகளில் மோனிஷா மூழ்கி இருந்தார். ஒன்றரை வயது சிறுவன் தர்னிஷ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் வீட்டிற்கு முன் இருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளான். தாய் சமையல் வேலையில் மும்முரமாக இருந்ததால், குழந்தை விழுந்ததை கவனிக்கவில்லை. நீண்ட நேரமாக மகனை காணாததை அப்போதுதான் அவர் கவனித்துள்ளார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் துள்ளதுடிக்க நடந்த படுகொலை; நேரில் பார்த்து பதறியோடிய மக்கள் கூட்டம்.. 3 பேர் கும்பல் பகீர் செயல்.!
பிணமாக மிதந்த பிஞ்சு
உடனே அங்கும் இங்கும் தேடி அலைந்துள்ளார். சற்று நேரத்தில், சிறுவனின் உடல் அந்த வாய்க்காலில் மிதக்க துவங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன மோனிஷா அலறி அடித்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார். ஆனால், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட தாய் கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களே கவனம்
மழைக்காலங்களில் ஆங்காங்கே நீர்நிலைகள் நிரம்பியும், தண்ணீர் தேங்கியும் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மின்வயர்கள் கவனிப்பாறின்றி மக்கள் புழங்கும் இடங்களில் கிடைக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் அவர்களை இழந்து தவிக்க நேரிடும்.
இதையும் படிங்க: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்... ஆசிரியர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்.!!