மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கார்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலி மூவர் படுகாயம்!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர்கள் தர்ஷன்சாய் மற்றும் சசிதரன். இவர்கள் இருவரும் சசிதரன் உறவினர் காரில் திருச்சி - ராமேஸ்வரம் பைபாசில் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மற்றொரு காரில் சபரீஷ்வரன் மற்றும் அஸ்வின் காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி வந்துள்ளனர். இந்த 2 கார்களும் மானகிரி பகுதி அருகே வந்தபோது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் காளையார்கோவிலை சேர்ந்த பிச்சை மகன் தர்ஷன் சாய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மற்ற மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.