மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைனில் கேம் விளையாடிய மகன்.! வங்கியில் பணம் எடுக்க சென்ற தாய்க்கு ஏற்பட்ட அதிர்ச்சி.!
ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் அமலாபுரத்தை சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் ஒருவன் தனது தாயின் மொபைலில் ப்ரீ பயர் என்ற கேம்மை பதிவிறக்கம் செய்து விளையாடி வந்துள்ளார். அந்த மாணவனின் தந்தை வெளிநாட்டில் வேலை செய்து மாதம் குறிப்பிட்ட தொகையை மனைவியின் வங்கி கணக்கில் அனுப்பி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த மாணவன் ஆன்லைனில் ப்ரீ பயர் கேம் விளையாடி வந்த போது கூடுதல் ஆயுதங்களை வாங்க ₹1000 முதல் ₹10,000 வரை செலவாகும் என்பதால் வங்கி கணக்கின் விவரங்களை அப்லோட் செய்யுங்கள் என்ற குறுந்தகவல் வந்துள்ளது.
அதனை அடுத்து அந்த சிறுவனும் தனது தாயின் வங்கி கணக்கின் விவரங்களை கொடுத்துள்ளார். அதன்படி வங்கி கணக்கிலிருந்து ₹5.40 லட்சம் வரை கட்டி கடந்த மூன்று நாட்களாக விளையாடி வந்துள்ளார். இதற்கிடையில் அந்த சிறுவனின் தாய் வங்கியில் பணம் எடுக்க சென்ற போது தான் வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்ட விவரம் தெரிந்துள்ளது.
அதனை தொடர்ந்து அமலாபுரம் போலீஸ் நிலையத்தில் தனது மகனுடன் சென்று நேற்று புகார் அளித்தார். போலீஸாரும் சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.