ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதல் விவகாரத்தில் ஒருவர் வெட்டி படுகொலை.! 2 பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த 4 பேர் கைது!
தேனி மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேரை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் ஜி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த சுருளி கிருஷ்ணன்(38). இவர் நேற்று தனது அண்ணன் சுந்தர்ராஜ் மற்றும் உறவினர் மூர்த்தி ஆகியோருடன் பரசுராமபுரத்திலிருந்து ஜி மீனாட்சிபுரத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சார்ந்த சுந்தரமூர்த்தி என்பவருடைய வீட்டு அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர் . அந்த நேரத்தில் அப்பகுதிக்கு வந்த சுந்தரமூர்த்தி அவரது மனைவி சத்யா சுந்தரமூர்த்தியின் தம்பி சரவணகுமார் மற்றும் அவரது மனைவி சத்ய ஆகியோர் சுருளி கிருஷ்ணன் மற்றும் அவரது அண்ணன் ஆகியோருடன் தகராறில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சுருளி கிருஷ்ணனின் அண்ணன் சுந்தர்ராஜ் மற்றும் அவரது உறவினர் மூர்த்தி ஆகியோர் தப்பி ஓடிவிட சுருளி கிருஷ்ணனை சுந்தரமூர்த்தி குடும்பத்தினர் மடக்கிப்பிடித்தனர். அப்போது சுந்தரமூர்த்தி வைத்திருந்த அருவாளால் சுருளி கிருஷ்ணன் தலையில் சரமாரியாக வெட்டினார் இதனைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுருளி கிருஷ்ணனை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறை வழக்கு பதிவு செய்து மறைந்திருந்த சுந்தரம் மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்திருக்கிறது. காவல்துறையின் விசாரணையில் சுந்தரமூர்த்தியின் மகளை சுருளி கிருஷ்ணனின் அத்தை மகன் விவேக் மூர்த்தி என்பவர் காதலித்து வந்திருக்கிறார். இது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் சுருளி கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.