மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரு தலை காதலால் நிகழ்ந்த விபரீதம்... பிளஸ் 2 தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு அரிவாள் வெட்டு... தூத்துக்குடியில் பரபரப்பு!!
தூத்துக்குடி அருகே உள்ள கீழ செக்காரக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமாரி. இவர் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்துள்ளார். தங்கமாரியை அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் தங்கமாரி +2 கடைசி தேர்வை எழுதி விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது சோலையப்பன் தங்கமாரியிடம் பேச முயன்றுள்ளார். ஆனால் அதற்கு தங்கமாரி மறுப்பு தெரிவித்து விட்டு அங்கிருந்து செல்ல முயன்றுள்ளார். இதனால் சோலையப்பன் கோபமாகி உள்ளார்.
அதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கமாரியை கடுமையாக தாக்கியுள்ளார். அதில் தங்கமாரிக்கு கை மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.