தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஆன்லைன் மோசடி.. பார்வையற்ற மாற்றுத்திறனாளிடம் கடன் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டோர் கைதான சம்பவம்..!
சென்னையில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் ஆன்லைனில் கடன் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட டெல்லியை சேர்ந்த 2 தமிழக பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சைதாப்பேட்டையை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு அமைப்பிற்கு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது 2 ஆண்டுகளுக்கு முன்பு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய நபர்கள் சவுத் இந்தியன் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து கடன் தருவதாக கூறியுள்ளனர். மேலும் ஆண்டுக்கு 1% வட்டியில் கடன் தருவதாக கூறியதை நம்பி 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியதாகவும் இதன் பிறகு அந்த நிறுவனம் தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனையடுத்து புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். பின்னர் செல்போன் எண்கள் மூலம் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதாக வந்து தகவலையடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீசார் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.