மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களே உஷார் ...! ஆன்லைன் மோசடி கும்பல் மூலம் பணத்தை இழந்த முதியவர்.!!
கோவை மாவட்டம் துடியலூர் இடிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவர் செல்போன் எண்ணுக்கு சில தினங்களுக்கு முன்பு வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்ற குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனுடன் வந்த இணையதள லிங்கில் வங்கி கணக்கு விவரங்களை பதிவிட வேண்டும் என்றும் குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது மோசடி கும்பலின் சூழ்ச்சி என்று அறியாத முதியவர் தனது வங்கி கணக்கு விவரங்களை அந்த இணையதள லிங்கில் பதிவிட்டுள்ளார். உடனே தனது வங்கி கணக்கில் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 715 ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
இதனால் அதிர்ந்து போன குமரவேல் சைபர் கிரைமில் புகார் மனு அளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார் மோசடி கும்பலிடம் இருந்து ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்துள்ளனர்.
பணத்தை மீட்டதற்கான சான்றிதளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதிக்கப்பட்ட குமரவேலிடம் வழங்கினார். இந்த புகாரில் துரிதமாக செயல்பட்டு பணத்தை மீட்டுக் கொடுத்த சைபர் கிரைம் போலீசாருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்தார் குமரவேல்.