மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் காதல்.. நிர்வாண வீடியோ கால்.. இளம் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
மதுரை அருகே ஆன்லைன் மூலம் பழகி வீடியோ காலில் பேசி நிர்வாண வீடியோ எடுத்து இளம்பெண்ணை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் சேர்ந்த இளம் பெண் ஒருவர் அதே பகுதியை சேர்ந்த 23 வயதான அருண்குமார் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளார். இதில் அந்த இளைஞர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி பேசி வந்துள்ளார்.
இதனை உண்மை என்று நம்பி அந்த இளம் பெண்ணும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இந்த நெருக்கம் அதிகரிக்கவே வீடியோ கால் மூலமாக அடிக்கடி பேசி வந்துள்ளனர். இதில், சில நேரங்களில் நிர்வாணமாக வீடியோ காலில் பேசியுள்ளனர்.
இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அருண்குமார் அந்த இளம் பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருண்குமார் என்னுடன் பேசவில்லை என்றால் உன்னுடைய நிர்வாண வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட விடுவேன் என அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம் பெண் மகளிர் காவல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் அருண்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.