திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#JustIN: ஊட்டி மலை இரயில் சேவை அடுத்த 3 நாட்களுக்கு இரத்து: தொடர் மழை எதிரொலியால் அறிவிப்பு.!
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்கிறது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவு போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன.
இந்நிலையில், ஊட்டி - மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் மலை இரயில், இன்று முதல் 13ம் தேதி வரை காலவரையின்றி இரத்து செய்யப்படுவதாக சேலம் இரயில்வே கோட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 07:00 மணிக்கு ஊட்டி புறப்படும் மலை இரயில், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மதியம் 14:00 (02:00 மணி) மணிக்கு புறப்படும் மலை இரயில் இரு மார்க்கத்திலும் இரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மேட்டுப்பாளையம் பகுதியில் ஒரேநாளில் பேய்மழை கொட்டித்தீர்த்ததால், சாலைகளில் வெள்ளம், நிலச்சரிவு போன்றவை ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.