#Breaking: ஊட்டி - பெங்களூர், கேரளா சாலைகள் துண்டிப்பு... தொடர் கனமழை எதிரொலி.!
தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலைகளில் விழுந்துள்ளன.
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளான நிலச்சரிவு, மரம் சாலைகளில் விழுதல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், கூடலூர் - பெங்களூர் சாலையில் பல்வேறு இடங்களில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.
இதனைப்போல, ஊட்டி - பெங்களூர் சாலை, கூடலூர் - கேரளா சாலையிலும் மழையினால் மூங்கில் மரங்கள் சரிந்து சாலைகளில் விழுந்துள்ளன. அதனை அகற்றும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது.