இனி சொந்த கார்களை இதற்கு பயன்படுத்த கூடாது.! போக்குவரத்து ஆணையர் அதிரடி உத்தரவு!!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் ஜுன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் சண்முக சுந்தரம் அவர்கள் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளில் சொந்த வாகனங்களை தேர்தல் பணிக்காக வாடகைக்கு கொடுத்து வருவதாக தொடர்ந்து பல புகார்கள் வந்தவண்ணம் உள்ளது.
இந்த நிலையில் வாகன ஓட்டிகள் சொந்த பயன்பாட்டு வாகனங்களை வாடகை வாகனமாக பயன்படுத்தக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.