மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கிருஷ்ணகிரியில் காதல் ஜோடி ஆணவ படுகொலை! ஆதரவு திரட்டும் பா.ரஞ்சித்
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் சடலமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இது நிச்சயம் ஆணவ படுகொலை தான், இதை எதிர்த்து போராட வேண்டும் என இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் நந்தீஷ் என்ற இளைஞர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர். சுவாதி, நந்தீஷை விட உயந்த சாதியை சேர்ந்தவர். இவர்களின் காதல் விவகாரம் 3 மாதங்களுக்கு முன்பு தெரிய வந்துள்ளது.
இவர்களின் காதலுக்கு சுவாதியின் குடுமத்தினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காதலர்கள் இருவரும் 3 மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு தெரியாமல் ஓடி வந்து திருமணம் செய்துகொண்டுள்ளனர். கலப்பு திருமணம் செய்துகொண்ட இவர்கள் ஓசூரில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் சில நாட்களாக இந்த காதல் ஜோடிகளை காணவில்லை. இதனை தொடர்ந்து நந்தீஸின் தம்பி சங்கர் கடந்த 11 ஆம் தேதியில் இருந்து புதுமண தம்பதிகளை காணவில்லை என ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அந்த புதுமண தம்பதிகளை காவல் துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தான் கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம், சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் இருந்து இரண்டு உடல்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த உடல்களை பற்றி விசாரணை நடத்துகையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சுவாதி மற்றும் நந்தீஸ் என தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து பெண்னின் தந்தை மற்றும் 3 உறவினர்கள் கிருஷ்ணகிரி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதன் மூலம் அவர்கள் தான் கலப்பு திருமணம் செய்த தம்பதியினரை ஆணவ படுகொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குனர் பா.ரஞ்சித் "இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை...வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்_சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!!" என பதிவிட்டுள்ளார்.
இதோ நிகழ்ந்தேறி விட்டது இன்னுமொரு கொடுந்துயர சாதி ஆணவ படுகொலை...வாய் பேச முடியாத காளைகள் எங்கள் குடும்பத்தில் ஒன்று என போராடிய தமிழ் போராளி தோழமைகளே!!! வாய் பேச முடிந்த #நந்தீஸ்_சுவாதி இவர்களை கொன்ற சாதி திமிருக்கு எதிராக திரள்வோம்!! வாருங்கள் நீதி கேட்போம்!! pic.twitter.com/JmVJgFlIeA
— pa.ranjith (@beemji) November 16, 2018