திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்; தமிழ்நாடு அரசின் சார்பில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
தமிழ்நாட்டில் ஜூன் 29ம் தேதியான நாளை பக்ரீத் பண்டிகை வெகு விமர்சையாக சிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இஸ்லாமிய பெருமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு ஏதுவாக, 800 சிறப்பு பேருந்துகள் அரசின் சார்பில் இயக்கப்படுகிறது.
இன்று மற்றும் நாளை சென்னை உட்பட பெரு நகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்லவும், சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை உட்பட அவர்கள் பணியாற்றும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை சென்ட்ரல் இருந்து திருநெல்வேலி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும், இன்று இரவு 11:15 மணி அளவில் இந்த சிறப்பு ரயில் புறப்படும் என்றும் இரயில்வேயின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.