திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பெற்றோர்களே உஷார்.. மாணவிகளிடம் சில்மிஷ வேலையில் ஈடுபட்ட ஆங்கில ஆசிரியர்.. கையும் களவுமாக மடக்கிய போலீஸ்..!
சேலம் மாவட்டம் நடுப்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆங்கில ஆசிரியராக ராஜமாணிக்கம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராஜமாணிக்கம் பள்ளியில் பயிலும் மூன்று மாணவிகளை டியூசன் சொல்லித் தருவதாக வீட்டிற்கு தனித்தனியாக வரவழைத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இந்நிலையில் ஆசிரியரின் இந்த செயலால் அச்சமடைந்த மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் இதைப் பற்றி தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் ராஜமாணிக்கத்தை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஆசிரியர் ராஜமாணிக்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்று மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பணியிட மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.