மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலை முறிக்காத பள்ளி மாணவி.. பெற்றோர் செய்த கொடூர செயல்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பட்டவாரப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகள் ஸ்பூர்த்தி. இவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மாணவ ியை அதே பகுதியை சேர்ந்த சிவா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மாணவிக்கு தற்போது 18 வயது பூர்த்தியாகாத நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிவா அழைத்துச் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்த நிலையில், சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த சிவாவுடன், ஸ்பூர்த்தி காதலைத் தொடர்ந்து வந்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் மகளை கண்டித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி மாணவி திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து நேற்று முன்தினம் தலையில் பழுத்த காயங்களுடன் மாணவியின் உடல் ஏரியிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதனிடையே அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மாணவி காணாமல் போன தினத்தில் வீட்டிற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவை மர்ம நபர் ஒருவர் துணி போட்டு மூடியது தெரியவந்தது. இதனையடுத்து மனைவியும் பெற்றோர் மற்றும் பெரியம்மா ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் சிவாவை மறக்குமாறு வற்புறுத்தியதாகவும், அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கொலையை மறைப்பதற்காக உடலை ஏரியில் வீசியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் பெரியம்மா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.