மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கட்டிய தாலியில் ஈரம் காய்வதற்குள் பெத்த மகளுக்கு பெற்றோர் செய்த கொடுமை!! பதறும் பட்டுக்கோட்டை..
மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்த பெண்ணை, திருமணம் முடிந்த 3 வது நாளில் பெற்றோரே கொலைசெய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவலூரை சேர்ந்தவர்கள் நவீன், ஐஸ்வர்யா. இருவரும் பள்ளியில் படிக்கும்போதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படும்நிலையில், இருவரும் சமீபத்தில் திருப்பூருக்கு வேலைக்கு சென்றுள்ளனர். வேலைக்கு சென்ற இடத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டநிலையில், மகள் திருமணம் செய்துகொண்ட தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, பெண்ணின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் சிலர் திருப்பூருக்கு சென்று தங்கள் மக்களை அவர்களுடன் அழைத்துசென்றுள்ளனர். இதன்பின் தனது மனைவி ஐஸ்வர்யாவை தொடர்புகொள்ள நவீன் முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர், பூவலூர் சென்று ஐஸ்வர்யாவின் பெற்றோரிடம் விசாரித்துள்ளார்.
ஊருக்கு வந்த தங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது உடலை எரித்துவிட்டதாகவும் ஐஸ்வர்யாவின் பெற்றோர் கூறியுள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நவீன், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்க, வழக்கு பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஐஸ்வர்யாவின் உறவினர்களிடம் விசாரித்ததில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்ததை அடுத்து, ஐஸ்வர்யாவின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி முழுதுவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.