மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பள்ளிக்குச்சென்ற மாணவியை கல்லால் அடித்த கயவன்.. நொறுக்கிய பொதுமக்கள்..!
பள்ளிக்கு செல்லும் மாணவிகளை, கல்லால் அடித்த வாலிபரை பெற்றோர்கள் தர்மஅடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள பெண்ணாடம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரக்கணக்கான பெண் குழந்தைகள் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளிக்கு செல்லும் மாணவிகளை ஒளிந்திருந்து மர்ம நபர் ஒருவர் தினமும் கல்லால் அடித்துள்ளார்.
இதனால் பள்ளியில் பயிலும் மாணவிகள் பெற்றோரிடம், 'இனி நான் பள்ளிக்கு செல்ல மாட்டேன். என்னை ஒருவர் கல்லால் அடிக்கிறார்' என்று கூறியுள்ளனர். இதனால் கோபமுற்ற பெற்றோர் சிறுமிகள் பள்ளிக்கு செல்லும்போது, பின்தொடர்ந்து மாணவிகள் மீது கல்லெறிந்த வாலிபரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
அத்துடன் பெற்றோர்கள் மட்டுமல்லாது அருகிலிருந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த வாலிபருக்கு தர்ம அடி கொடுத்து பெண்ணாடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அவர் சௌந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.
இந்த விஷயம் தொடர்பாக விருத்தாச்சலம் ASP அங்கித் ஜெயின் விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், கிராம பகுதிகளில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும் நிலையில், இது போன்ற பெண் குழந்தைகள் மீதான தாக்குதல் நடத்துவதை சமூக ஆர்வலர்கள் மிகவும் வன்மையாக கண்டித்துள்ளனர்.
அத்துடன் அந்த வாலிபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். மேலும், இந்த சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.