திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை உடைத்து திருட முயன்ற இளைஞர்... கையும் களவுமாக சிக்கியதும் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் சரோஜினி. இவரது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார் சரோஜினி. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரோஜினி தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை உடைத்து திருட முயன்றுள்ளார். அப்போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் வருவதை உணர்ந்த பக்கத்து வீட்டுக்கார பெண் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது இளைஞர் ஒருவர் அரிவாளுடன் வீட்டிற்குள் இருந்துள்ளார்.
உடனே அந்த பெண் சத்தம் போட்டதை அடுத்து ஒன்று திரண்ட பொது மக்கள் திருடனை பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கவே போலீசார் அந்த இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.