ஏ.டி.எம் உபயோகிக்க தெரியாதவரா நீங்கள்?.. ஏ.டி.எம் வாசலிலேயே நூதன மோசடி.. விவசாயியிடம் கைவரிசை காண்பித்த கும்பல்.! உஷார்...!!
உரத்திற்கு பணம் எடுக்க சென்ற விவசாயியிடம் கும்பல் நூதன முறையில் ரூ.20 ஆயிரம் கையாடல் செய்த சம்பவம் நடந்துள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருவத்தூர், நாரணமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜன் (வயது 38). இவர் வயலுக்கு உரம் போடுவதற்காக பணம் எடுக்க கொகளக்காநத்தம் கிராமத்தில் இருக்கும் ஏ.டி.எம்-ற்கு சென்றுள்ளார். அவருக்கு ஏ.டி.எம் பயன்படுத்தி பணம் எடுக்க தெரியாது.
இதனால் ஏ.டி.எம் கார்டை மையத்தின் வெளியே இருந்த சரத் குமார், பிரசாந்த், கபில் ஆகிய இளைஞர்களை உதவிக்கு அழைத்து பணம் எடுத்து கொடுக்க கூறியுள்ளார். அவர்களும் ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துவிட்டு, தியாகராஜனின் ஏ.டி.எம்முக்கு பதில் மற்றொரு ஏ.டி.எம்மை கொடுத்து பணம் இயந்திரத்தில் வரவில்லை என்று கூறியுள்ளனர்.
தனது ஏ.டி.எம் கார்டு மாற்றப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து தியாகராஜன் உதவிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தோரை அழைக்க, சுதாரித்த 3 பேர் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதில், சரத் குமார் மற்றும் கபில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டான்.
இதனையடுத்து, மருவத்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் நூதன மோசடி உறுதியாகவே, வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவான பிரசாத்துக்கு வலைவீசப்பட்டுள்ளது.