மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவன் - மனைவி உடல் நசுங்கி பலியான பரிதாபம்; இன்ப பயணம் நொடியில் மரணித்த சோகம்..!
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதிகள் பரிதாபமாக பலியாகினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் கிராமம், வடக்கு மாதவி ரோடு சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் பிரபு (வயது 29). இவரின் மனைவி காந்திமதி (வயது 29).
தம்பதிகள் இருவரும் நேற்று திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, பாடலூரை அடுத்த மங்களமேடு பகுதியில், தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, மங்களமேடு மின் அலுவலகம் முன்பு அடையாளம் தெரியாத வாகனம் தம்பதியின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவருகிறது.
இந்த விபத்தில் தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி பலியாகி இருக்கின்றனர். விபத்து குறித்து மங்களமேடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.