அரசு பேருந்து லாரியின் பின்புறம் மோதி கோர விபத்து.. ஓட்டுநர், நடத்துனர் பரிதாப பலி., 10 பேர் படுகாயம்.!



perambalur-near-govt-bus-lorry-accident-2-died-10-injur

லாரியின் பின் பகுதியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்தினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சென்னை - திருச்சி செல்லும் சாலையில், சின்னாறு அருகே இன்று பயங்கர விபத்து நடந்துள்ளது. சென்னையில் இருந்து திருச்சி நோக்கி டாரஸ் லாரி கம்பி லோடு ஏற்றிக்கொண்டு பயணம் செய்தது. 

இதனைப்போல, சென்னையில் இருந்து 30 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றுக்கொண்ட அரசு பேருந்து திருச்சி நோக்கி பயணம் செய்தது. இந்த பேருந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சின்னாறு அருகே வந்துள்ளது. 

அப்போது, லாரியின் பின்னால் சென்றுகொண்டு இருந்த அரசு பேருந்து, எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து லாரிக்கு பின்னால் மோதியது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 

Perambalur

திருச்சி லால்குடி கிராமத்தைச் சார்ந்த ஓட்டுநர் தேவேந்திரன், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சார்ந்த நடத்துனர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பெரம்பலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும், பேருந்தில் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.