மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிறந்த பச்சிளம் சிசு சடலமாக முட்புதரில் வீச்சு.. பெரம்பலூரில் அதிர்ச்சி சம்பவம்.!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை, மரவனத்தம் கிராமம் அருகே ஊர் எல்லைப்பகுதியில் பாலம் உள்ளது. இந்த பாலம் அருகே இருக்கும் முட்புதரில் பிறந்து சிலமணிநேரம் ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.
குழந்தை உயிரிழந்த நிலையில் பிணமாக இருக்கவே, இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டனர்.
பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவே, குழந்தையின் உடலை வீசி சென்றது யார்? இது காதலால் பிறந்த குழந்தையா? கள்ளகாதலால் பிறந்த குழந்தையா? குழந்தை இறந்து பிறந்ததா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.