ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு.. பெற்றோரை வீட்டை விட்டு துரத்திய மகன்.. காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி.!
பெரியசெவலை கிராமத்தில் வசித்து வருபவர்கள் திரிசங்கு - சிவபாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 4 மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களின் மூத்த மகனான ஏழுமலை அவ்வீட்டில் தங்கியிருந்த பெற்றோரை வயதானவர்கள் என்று கூட பார்க்காமல் வீட்டை விட்டு அடித்து துரத்தியுள்ளார். மேலும் அவர்களது பொருட்களை வெளியில் தூக்கி வீசியதோடு மட்டுமல்லாமல் அவர்களை கடுமையாகவும் சாடியுள்ளார்.
இதனால் மனம் உடைந்து போன வயதான தம்பதியினர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் தன் மகன் ஏழுமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து அந்த தம்பதியினர் அங்கிருந்து சென்றனர்.