திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அரசு பள்ளியில் சேர அடம் பிடித்த மாணவி... மறுப்பு தெரிவித்த பெற்றோர்... மாணவி எடுத்த சோக முடிவு.!
திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்குச் செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ் டூ மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள கரட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவர் அங்குள்ள பனியன் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் சத்யா(17). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வந்தார்.
இந்நிலையில் சத்யாவின் தோழிகள் அனைவரும் அரசு பள்ளியில் படித்து வந்ததால் தன்னையும் அங்கேயே சேர்க்குமாறு பெற்றோரிடம் அடம் பிடித்து இருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர் நீ தனியார் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என கண்டிப்பாக கூறியிருக்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சத்தியா சனிக்கிழமை பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று வீட்டில் அனைவரும் வெளியே சென்று இருந்த நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார் சத்யா. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.