கலவர பூமியாகும் தமிழ்நாடு - அன்புமணி உச்சகட்ட எச்சரிக்கை.. அரசுக்கு எதிராக போர்க்கொடி.!



PMK Anbumani Warning to Tamilnadu Govt 

 

சென்னையில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காத பட்சத்தில், தமிழ்நாட்டில் அமலில் இருக்கும் 69 % இடஒதுக்கீட்டுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என கூறினார். 

இதுதொடர்பாக அவர் பேசுகையில், திமுக அரசின் செயல்பாடு காரணமாக, தமிழ்நாடு 69 % இடஒதுக்கீடு விஷயத்தில் உச்சநீதிமன்றம் எதிர்ப்பாக தீர்ப்பு வழங்கினால் தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும். 

இதையும் படிங்க: #Breaking: பெட்ரோல் குண்டு வீசி 21 வயது இளைஞர் கொலை.. அன்புமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி.!

திமுக தரப்பு தற்போது செய்து வருவது பிற்காலத்தில் பிரச்னைக்கே வழிவகை செய்யும். தமிழ்நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்பட வேண்டும். 

உச்சநீதிமன்றம் 50% க்கு மேல் மாநில இடஒதுக்கீடு பகிர்வு இருக்கக்கூடாது என்ற விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 69% மாநில இடஒதுக்கீடு இருக்கிறது. 

நீதிமன்றத்தில் என்னதான் சட்டப்போராட்டம் நடத்தினாலும், சாதிவாரிகணக்கெடுப்பு இல்லாத பட்சத்தில், 69 % இடஒதுக்கீடை உயர்த்தியது குறித்த விஷயம் கேள்விக்குறியாகும். உச்சநீதிமன்றத்திற்கு தரவுகள் தேவை. 

ஒருவேளை உச்சநீதிமன்றத்தில் 69 % இடஒதுக்கீட்டுக்கு எதிராக தீர்ப்பு ஏதேனும் கிடைக்கப்பெற்றால், தமிழ்நாடு கலவர பூமியாக மாறிவிடும். திமுகவின் ஆட்சி அகன்றுபோகும். அதனால் தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்" என பேசினார்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனம் - அரசு பேருந்து மோதி விபத்து; ஒருவர் பலி., 3 மாணவிகள் காயம்.!