மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய இன்ஸ்பெக்டர்! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி!
சென்னையில் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர் கையும் களவுமாக பிடிபட்டார். சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய குற்ற பிரிவு ஆய்வாளரான தமிழழகனை லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் லஞ்சப்புகாரில் கைதான சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தமிழழகனிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் வழக்கு விசாரணைக்காக ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரையின் படி பாதிக்கப்பட்ட நபர் ரசாயனம் தடவிய பணத்தை ஆய்வாளர் தமிழழகனிடம் கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தமிழழகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட தமிழழகனை, போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே லஞ்சம் வாங்கிய புகாரில் கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்து வில்லிவாக்கம் காவல் நிலையத்திற்கு தமிழழகன் மாற்றம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.