மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்குறிச்சி : மெடிக்கலில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு.. 4 பேர் கைது!
கள்ளக்குறிச்சி அருகே மெடிக்கலில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் அசகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் தனது மனைவி சினேகாவை உரிமையாளராக கொண்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் கிராமத்தில் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார். தற்போது இந்த கடைக்கான உரிமம் அசக்கலைத்துறை சேர்ந்த மருந்தாளுனர் கௌதமி என்பவரது பெயரில் மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று மெடிக்கலில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து வேப்பூர் போலீசார் நேற்று மதியம் 12.30 மணி அளவில் மெடிக்கலுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் மணிவண்ணன் மற்றும் மருந்தாளுனர் கௌதமி இருவரும் சேர்ந்து சட்டவிரோதமாக தொடர் கருக்கலைப்பு செய்து வந்தது தெரிய வந்தது.
மேலும் மெடிக்கலில் வைத்திருந்த கருக்கலைப்பு மாத்திரைகள், அதற்கு பயன்படுத்திய உபகரணங்கள், கருவில் இருக்கும் குழந்தை ஆனா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் கருவி போன்றவற்றையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணிவண்ணன், கௌதமி மற்றும் புரோக்கர்கள் கண்ணதாசன் மற்றும் தினேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.