மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விவசாயிடம் லஞ்சம் கேட்ட விஏஓ.! விவசாயியின் சாமர்த்தியம்.! கையும், களவுமாக சிக்கிய விஏஓ.!
வேலூர் மாவட்டம் அணைகட்டு அடுத்த இலவன்பாடி கிராமத்தை சேர்ந்த நடராஜ் என்பவர் அவரது பட்டா பெயர் மாற்றம் செய்ய அப்பகுதி கிராம நிர்வாக அலுவலகர் ரேவதி எனபவரை அணுகியுள்ளார்.
விவசாயி நடராஜனின் பட்டா பெயர் மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் ரேவதி ரூ.3,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ரூ.2,000 கொடுப்பதாக நடராஜன் கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்க மறுத்த கிராம நிர்வாக அலுவலர் ரூ.2,500 கொடுத்தால் மட்டுமே பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நடராஜ் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளர். விவசாயி நடராஜனின் புகாரை ஏற்று உடனடியாக வந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை நடராஜிடம் கொடுத்து அதை விஏஓ-விடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.
இதனையடுத்து நடராஜன் பணத்தை கிராம நிர்வாக அலுவலர் ரேவதியிடம் கொடுத்த போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் அவரை கையும் களவுமாக பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.