மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயசு பையன் பாக்குற வேலையா இது.? ... ஐடி பெண் ஊழியர் புகாரின் பேரில் பக்கத்து வீட்டு சிறுவன் கைது.!
சென்னையில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த இளம் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வியாசர்பாடி சேர்ந்த 28 வயது இளம்பெண் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்தப் பெண்ணிற்கு அருகில் உள்ள வீட்டில் 15 வயது சிறுவன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது தன்னை ஜன்னல் வழியாக யாரோ வீடியோ எடுப்பதை போன்று உணர்ந்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஜன்னலை பார்த்தபோது 15 வயது சிறுவன் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் அந்த பெண் கத்தி சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறான். இது தொடர்பாக அந்த இளம் பெண் காவல்துறையிடம் அளித்த புகாரின் பேரில் சிறுவன் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.